விஜய் டிவி சீரியலுக்கு ‘குட் பை’ சொன்ன சஞ்சீவ்.! சன் டிவி சீரியலில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.!

வெளியிட்டது

நடிகர் சஞ்சீவ் நடிக்கும் புதிய தொடரின் ஷூட்டிங் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சஞ்சீவுக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிய பலரின் மனங்களை வென்ற ‘தாலாட்டு’ சீரியல் ஸ்ருதி ராஜ், திருமதி செல்வம் சீரியல் புகழ் நடிகை ரிந்தியாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சின்னத்திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகர் சஞ்சீவ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரேடான் மீடியா தயாரிப்பில் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த தொடரில் சஞ்சய் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இருவரும் ஜோடியாக நடிக்க இருந்தனர். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் சஞ்சீவ் தொடரில் இருந்து விலகி இருந்தார்.

விஜய் டிவி சீரியலுக்கு 'குட் பை' சொன்ன சஞ்சீவ்.! சன் டிவி சீரியலில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.! 1

இந்த தொடரில் நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் பூஜையில் சஞ்சீவ் கலந்து கொண்டிருந்த நிலையில், நாடகம் தொடங்குவதற்கு முன்பே அவர் சீரியலை விட்டு விலகி இருந்தார். சீரியல் ஆரம்பித்து பல நாட்கள் ஆன நிலையில் தற்போது சன் தொலைக்காட்சிக்கு சஞ்சீவ் திரும்பி இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் சஞ்சீவ். இந்த சீரியலில் ‘தென்றல்’ மற்றும் ‘தாலாட்டு’ ஆகிய தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் திருமதி செல்வம் சீரியலில் ஏற்கனவே சஞ்சீவ் உடன் இணைந்து நடித்த நடிகை ரிந்தியாவும் இந்த சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரின் காம்பினேஷனை பார்க்கும் பொழுது திருமதி செல்வம் போலவே ரிந்தியா இதில் சஞ்சீவிற்கு இரண்டாவது மனைவியாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த நாடகத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்