Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்த கமலை ஓடி வந்து கட்டிப்பிடித்த சூர்யா | Vikram Movie

வெளியிட்டது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்த கமலை ஓடி வந்து கட்டிப்பிடித்த சூர்யா | Vikram Movie 1

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பத்தல பத்தல பாடல் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Cinema vikatan

இந்த நிலையில் விக்ரம் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கிளைமாக்சில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார் என்பதுதான். மேலும் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிலும் சூர்யா கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக காரில் இருந்து இறங்கும் கமலை ஓடி வந்து சூர்யா கட்டிப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து கமல் படம் வெளியாக இருப்பதாலும், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்