100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.! யாருனு நீங்களே பாருங்க

தமிழ் சினிமா துறை கோடிகளில் பணம் புரளும் துறையாக மாறியுள்ளது. தங்களை சம்பளத்தை தாங்களே கோடிகளில் நிர்ணயிக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளனர் தமிழின் முண்ணனி நடிகர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களின் பட்டியலையும், அவர்களின் சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது தனியார் தொலைக்காட்சி நிறுவனம்.

100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.! யாருனு நீங்களே பாருங்க 1

விளம்பரம்

 

அதன்படி முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தற்போதைய நிலவரப்படி அவர் 118 கோடி சம்பளம் வாங்குவதாக அந்த தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. தெறி படத்திற்கு முன்பு வரை 20 கோடி சம்பளம் வாங்கிய விஜய், அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் தயாரிப்பாளர்கள் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முன் வருவதாக தெரிகிறது. இரண்டாமிடத்தில் இருப்பவர் தல அஜீத், ஏகே 62 படத்திற்காக இவர் 105கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்திற்காக 105கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அண்ணாத்த படம் தோல்வியடைந்த காரணத்தால் அதே நிறுவனத்தில் அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ள ரஜினி இழப்பை ஈடு செய்யும் வண்ணம் 20கோடியை குறைத்து 80 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். Youtube video code embed credits: Puthiya thalaimurai

விளம்பரம்

100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.! யாருனு நீங்களே பாருங்க 3

மேலும் கமலின் சம்பளம் 35 கோடி என்றும், சூர்யாவின் சம்பளம் 28 கோடி என்றும், சிவகார்த்திகேயன் 25 கோடி, தனுஷ் 20 கோடி சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண நடுத்தர மனிதர்களின் அன்றாட வருமானம் ஆயிரத்தைக் கூட தாண்டாத நிலையில் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்
தொடர்புடையவை  அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து சூர்யா விமானத்தில் பாடல் வெளியீடு!!

விளம்பரம்

Leave a Comment