என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்

காதலித்த சமயங்களில் தான் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களை ஏங்க வைத்தார்கள் என்றால், தற்போது திருமணம் ஆன பிறகும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஏங்க வைத்து வருகின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. அப்போதே அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்த இவர்கள், பின்னாளில் வெளிப்படையாக அறிவித்தனர். பின்னர் ஊர் ஊராக சுற்றுவது, அவுட்டிங் செல்வது, டேட்டிங் செல்வது என்று இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து கடந்த ஜூன் மாதம் திருமணமும் செய்து கொண்டனர்.

என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 1

விளம்பரம்

மகாபலிபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடந்தது இவர்களின் திருமணம். பின்னர் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமுனுக்காக சென்றனர். அங்கு முதல் முறை ஹனிமுனை முடித்துவிட்டு திரும்ப அவர்கள் தங்கள் வேலைகளில் பிஸியாகினார். நயன்தாரா தற்போது தன்னுடைய முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கான சூட்டிங்களுக்காக மும்பைக்கும் சென்னைக்கும் அவர் வந்து சென்று கொண்டிருந்தார். மேலும் இந்த சமயத்தில் விக்னேஷ் இவனுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கும் வாய்ப்பும் கிடைத்ததால், அவரும் அதில் பிஸியாக இருந்தார். இதனால் இருவரும் தங்களுக்கான நேரத்தை செலவிட முடியாமல் இருந்து வந்தது. எனவே இருவரும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு டூருக்கு செல்வதாக அறிவித்துவிட்டு அங்கு சென்றுள்ளனர்.

தொடர்புடையவை  "சூரியா 41 படத்தால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் பாலா"!! ரகசியமாக இருந்த படத்தின் தலைப்பு இணையத்தில் கசிந்தது!!

என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 3

விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், தினமும் தனது காதல் மனைவியை ரசித்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாவோன்சியா நகரில் தற்கால கட்டிடங்கள் முன்பாக அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார். அதோடு நீ என் உலக அழகி, உன்னை போல் ஒருத்தி இல்லையே, என் உலக அழகியும் இவ்வுலகத்தின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகான பெண் நயன்தாரா, இதுவரை சென்ற இடங்களில் மிகச்சிறந்த இடம் என்று அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 5 என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 7 என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 9 என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 11 என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 13 என் உலக அழகியே..! நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் 15

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment