விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருந்த போதிலும், மக்கள் பெரிய அளவில் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்திவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் கதையில்லாமல் அரைத்த மாவேயே அரைத்து மக்களை வெறுப்படையச் செய்துள்ளார் இதன் இயக்குனர். பல ரசிகர்களும் கமெண்ட்களில் இந்த சீரியலை தயவு செய்து நிறுத்தி விடுங்கள் என்று கெஞ்சிய போதிலும் ஜவ்வு போல் இழுத்தடித்து வருகிறார் இயக்குனர். இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதில் கைதேர்ந்தவர் ஆக இருப்பவர் மருத்துவர் பாரதி. இவரை வெண்பா என்ற தோழி பல வருடங்களாக காதலித்து வருகிறார். பாரதி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை என்று பல வருடங்களாக ஏமாற்றி வைத்திருக்கிறார் வெண்பா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இதனால் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விடுகிறார் பாரதி. அந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று பாரதியிடமும் மற்றொன்று கண்ணம்மா விடவும் வளர்கிறது. தற்போது கதைப்படி கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு பாரதி தான் தனது தந்தை என்று தெரியவந்துள்ளது. பாரதிக்கும் கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை தன்னுடையது தான் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டால் பாரதிக்கு அனைத்து உண்மைகளும் புரிய வந்துவிடும். இந்த இரண்டு குழந்தைகளுமே தன்னுடைய குழந்தைகள் தான் என்ற உண்மை அவருக்கு விரைவில் புரிந்து விடும். ஆனால் அங்கு தான் சிக்கல் நிலவுகிறது. நாடகம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பாரதியை கண்ணம்மா திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி தற்போது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்வது வரை காட்டப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை நாடகம் ஒரு விறுவிறுப்பே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்ற தொடங்கி இருக்கின்றனர். தற்போதைய கதைப்படி பாரதி தன்னிடம் வளரும் குழந்தையான ஹேமாவை கண்ணம்மாவிடம் வளரும் குழந்தையான லட்சுமியிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். ஏனென்றால் ஹேமாவும் லட்சுமியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால் உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் ஹேமாவை வேறொரு பள்ளியில் சேர்ப்பதற்காக பாரதி முயற்சிக்கிறார். ஆனால் இது நடக்கவே நடக்காது என்று கண்ணம்மா பாரதியிடம் சபதம் போடுகிறார். அந்தப் ப்ரோமாவை பார்த்த பலரும் இந்த சீரியலை கழுவி ஊற்ற தொடங்கிவிட்டனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Television