Categories: சினிமா

ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்..ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண போற ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?

வெளியிட்டது

தமிழின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஹிந்தியில் வெளியாக உள்ள ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் தான் ஜவான். இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த காட்சிகள் வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இடம் பெறுவார் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்..ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண போற ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா? 1

தமிழில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவர் விஜய் வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பிகில் படத்திற்கு பின்னர் அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ஹிந்தியில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தில் விஜய்யும் இணைய இருப்பதால் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாக இருக்கின்றனர்.

இதேபோன்று இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜவான் படத்தில் நடிப்பதற்காக விஜய் எந்தவிதமான சம்பளமும் வாங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில், ரவுடி ரத்தோர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் பிரபுதேவா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.. சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தா.ர் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்ததால் பல முன்னணி நடிகர்களும் மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்பு தொடக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடையே உருவானது. இதை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்