“இப்பவே இப்படி பண்றியே நீ….மேடையில் குழந்தை மானஸ்வியை திட்டிய கே.ராஜன்”

பழம்பெரும் தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் எதோ ஒரு வகையில் யாரை பற்றியோ பேசி எப்போதுமே பரபரப்பான மனிதராகவே சமீபத்திய காலங்களில் இருந்து வருகிறார். எந்த ஒரு தனியார் பட விழாக்கள் நடந்தாலும், அங்கு இப்போதெல்லாம் முதல் ஆளாக இருப்பார் நம் கே.ராஜன் அவர்கள். நடிகைகளுடன் மோதல், தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர்களை வம்புக்கு இழுப்பது என எதோ ஒரு வகையில் புரளியை கிளப்பி கொண்டே இருக்கிறார்.

"இப்பவே இப்படி பண்றியே நீ....மேடையில் குழந்தை மானஸ்வியை திட்டிய கே.ராஜன்" 1

விளம்பரம்

அண்மையில் செய்தியாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதனுடன் மோதலில் காவல்துறையின் உதவியை நாடியது வரை எப்போதுமே இவர் பரபரப்பு தான். சமீபகாலத்தில் நடிகர் கமலுடன் சண்டைக்கு நின்றார். பெரும்பாலும் இவர் தவறுதலாகவோ இல்ல, எதோ ஒரு நடிகை மறந்துவிட்டாலோ, இல்லை உண்மையில் திமிராக நடந்தாலோ முதலில் அங்கு அவர்களை திட்டுவது கே.ராஜன் தான்.

"இப்பவே இப்படி பண்றியே நீ....மேடையில் குழந்தை மானஸ்வியை திட்டிய கே.ராஜன்" 3

விளம்பரம்

தற்போது “மகா” என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகாவும், சிறப்பு கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்துள்ளார். சனம் ஷெட்டி, தம்பி ராமையா, ஸ்ரீகாந்த், மனஸ்வி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை யூ.ஆர்.ஜெமீல் என்பவர் இயக்கியுள்ளார். படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கே.ராஜன். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி நடித்துள்ளார். இவர் நடிகை நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான 2018ஆம் ஆண்டு படம் “இமைக்க நொடிகள்” மூலம் மிகவும் பிரபலமானார்.

தொடர்புடையவை  ராதிகா சரத்குமார் கட்டிய புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு வந்த தனுஷ்.! வெளியான புகைப்படங்கள்.!

"இப்பவே இப்படி பண்றியே நீ....மேடையில் குழந்தை மானஸ்வியை திட்டிய கே.ராஜன்" 5

விளம்பரம்

இவர் இந்த விழாவில் பேசும் பொது, “டைரக்டர் சார், கேமரா மேன் சார், ஹன்சிகா அக்கா, பிரோடுசேர் சார் என அனைவருக்குமே நன்றி” என கூறும் போதே, மேடையில் அமர்ந்து இருந்த கே.ராஜன், “இப்பவே நீ இப்படி பண்றியே…பிரோடுசருக்கு ஒரு நன்றி சொன்னியா” என கேட்க, தவறுதலாக மானஸ்வி இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு நன்றி சொல்வதை மறந்துள்ளார். அவர் ஒரு சின்ன குழந்தை எனவும் பாராமல் இவர் கே.ராஜன் மேடையில் நடந்து கொண்டதற்கு பலரும் கேவலமாக திட்டி வருகிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண…..

விளம்பரம்

Video Courtesy – Black Pepper News

விளம்பரம்

Leave a Comment