“அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, என்னுடைய வேட்கை” நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய்.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த செய்தியை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் விஜய், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைப்பினால் மட்டுமே இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

"அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, என்னுடைய வேட்கை" நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய்.! 1
தற்போதைய அரசியல் நிர்வாகம் ஊழல் மறைந்த அரசியல் கலாச்சாரம் மற்றும் சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் என ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன தன்னலமற்ற வெளிப்படையான சாதி மத மேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ கொள்கை பற்றி உடையதாக இருக்க வேண்டும் அத்தகைய அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.


என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர் புகழ் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே என்னுடைய நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் ஆகும். அதன்படி “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றப் பின்பு வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ் நாட்டு மக்களின் உயர்வுக்குமான கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் ஆகியவற்றை முனவைத்து நமது அரசியல் பயணம் துவங்கும்.


இடைப்பட்ட காலத்தில் கட்சித் தொண்டர்களை அரசியல் மையப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டு வரும் பணிகளை துவக்க இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டு தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல.அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல. அதன் நீள, அகலங்களையும் தெரிந்து கொள்ள எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்ட காலமாக என்னை தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியலில் எனக்கு பொழுதுபோக்கல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என்று விஜய் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Twitter Original Source From: Actor Vijay

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்