Categories: சினிமா

நடிகர் விவேக் மகளுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படங்கள் இதோ.!

வெளியிட்டது

‘சின்னக் கலைவாணர்’ என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் விவேகத்தின் இளைய மகள் தேஜஸ்வினிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விவேக் மகளுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படங்கள் இதோ.! 1

தமிழ் திரையுலகில் தனது முற்போக்கு சிந்தனைகளை நகைச்சுவைகளாக சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தனது கதாபாத்திரங்கள் மூலமாக சமூகத்தில் நடக்கும் அவலங்கள், மூடநம்பிக்கைகள் என அனைத்திற்கும் எதிராக குரல் கொடுத்தார். சமூக சீர்திருத்தங்களையும் ஆதரித்து தனது நகைச்சுவைகளை வெளிப்படுத்தினார்.

விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை முன்மாதிரியாக கொண்டு அவர்களது வழியிலும் நடந்து காட்டினார். இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றவும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்திருந்தார்.

திரையுலகிலும், பொது வாழ்க்கையிலும் கலக்கிய விவேக் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்தார்.

அவரது மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாக இருந்தது. இந்த நிலையில் விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் என்கிற நபரை திருமணம் செய்து கொண்டார்.

சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் விவேக்கின் வீட்டில் வைத்து இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

விவேக்கின் கனவை மெய்ப்பட வைப்பதற்காக மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் நட்டு திருமணத்தை நடத்தினர். மேலும் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கினர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பலரும் தேஜஸ்வினி மற்றும் பரத் தம்பதிகளுக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits: Kumudam Cinema

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்