புது கோமாளிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் சீசன் 5.! ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ இதோ.!

[வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது] சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 5க்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக சின்னத்திரையில், குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

புது கோமாளிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் சீசன் 5.! 'குக் வித் கோமாளி' ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நான்கு சீசன்களை வழங்கி வந்த நிலையில், வெங்கடேஷ் பட் இந்த சீசனுடன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவராக பங்கேற்கிறார். அதற்கான முதல் ப்ரோமோக்கள் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. அதில் வழக்கம் போல ரக்ஷன், மணிமேகலை, குரேஷி, சுனிதா ஆகியோர் கோமாளிகளாக ஐந்தாவது சீசனிலும் பங்கு பெறுவதை உறுதி செய்து இருக்கின்றனர்.

தொடர்புடையவை  ஆஹா கல்யாணம் தொடரில் நடந்த அதிரடி மாற்றம்.! இனி இவருக்குப் பதில் இவர்.!

புது கோமாளிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் சீசன் 5.! 'குக் வித் கோமாளி' ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

மேலும் மூன்றாவது சீசன் மற்றும் நான்காவது சீசனில் அவ்வப்போது தலைகாட்டிய புகழ் இந்த முறை முழுமையாக கோமாளியாக வர இருக்கிறார். அவருடன் இணைந்து புது கோமாளியாக ‘கலக்கப் போவது யாரு?’ ராமரும் வர இருக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment