செம்பருத்தி சீரியல் நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது திருமண நாளன்று அறிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த ஒரு தொடர் என்று சொன்னால் அது செம்பருத்தி சீரியல் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக்கும், கதாநாயகியாக நடிகை ஷபானாவும் நடித்து வந்தனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீரியலில் வில்லியாக மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பாரத நாயுடு. தற்போது இவர் தனது திருமண நாளன்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார் பாரத நாயுடு. செம்பருத்தி சீரியல் நடித்து வந்த பாரத நாயுடு பின்னர் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலில் நடித்திருந்தார். ஜீ தமிழில் இவரது நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. ஆதி கடவூர அகிலாண்டேஸ்வரியை இவர் தனது வில்லத்தனங்களால் பழிவாங்க செய்த பிளான்களை பலரும் திட்டி தீர்த்தனர்.
முதல் சீரியலிலேயே இவருக்கு ஹேட்டர்ஸ் அதிகமாக இருந்தனர். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த பாரத நாயுடு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு தான் முடித்தார். பின்னர் அவர் மாடலிங் துறையில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக மாடலாக களமிறங்கினார். தேன் மிட்டாய் என்கிற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மிர்ச்சி சிவா இயக்கத்தில் வெளியான “அட்ரா மச்சான் விசிலு” என்கிற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான நிரஞ்சனா என்கிற திகில் படத்திலும் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
வெள்ளி திரையில் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே சின்னத்திரை நோக்கி தனது கவனத்தை திருப்பினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான இவர், பின்னர் தேவதையை கண்டேன் என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் ஜீ தமிழுக்கு தாவிய அவர் செம்பருத்தி சீரியலில் மித்ராவாக நடித்திருக்கிறார்.
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O