நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.!

நடிகை நதியா அவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நதியாவை போலவே அவரது மகள்களும் அழகில் குறைவில்லாதவர்களாக இருக்கிறார்கள் . 1980, 90களில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 90 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.! 1

விளம்பரம்

அன்று தொடங்கி இன்று வரை “பூவே பூச்சூட நதியா” என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.

தொடர்புடையவை  நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாய் பரவும் தகவல் .! உண்மை என்ன?

நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.! 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஆரோக்யா பால் மற்றும் தங்கமயில் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாசிடராக மாறினார். ஜெயா டிவியில் நடிகை குஷ்பூவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கினார்.

நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.! 5

விளம்பரம்

2013 ஆம் ஆண்டில், தெலுங்கு திரைப்படமான மிர்ச்சியில் நடிகர் பிரபாஸின் தாயாகவும், அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு பிடிவாதமான அத்தையாகவும், அவர் நடித்த இரு பாத்திரங்களுக்கும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார், 2013 ஆம் ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதியில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.

நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.! 7

விளம்பரம்

நதியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை இவரின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தாயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் நதியா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடர்புடையவை  பிகில் லாபமா? நஷ்டமா? அர்ச்சனா கூறிய பதில்!

நதியாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்கள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த நதியா.! 9

விளம்பரம்

தற்போது முதல் முறையாக தனது மகள்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த படத்தில் நதியா மகள்கள் அப்படியே நதியா போலவே இருப்பதாகவும், சிறு வயதில் நதியாவை பார்த்தது போல இருப்பதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment