லியோ படக் குழுவினருடன் இணைந்து காஷ்மீரில் த்ரிஷா என்று காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. கோலிவுட்டின் இளவரசி என்று அழைக்கப்படுபவர் நடிகை திரிஷா. சினிமாவில் அறிமுகம் ஆகி 20 ஆண்டுகளில் சுமார் 66 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். வயது ஏற ஏற அழகும் ஏறிக் கொண்டே செல்பவர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகை திரிஷா. அதே இளமையும், அதே நடிப்பு திறமையும் அவரை மீண்டும் மீண்டும் கதாநாயகியாகவே வைத்திருக்கிறிருக்கிறது.

கடைசியாக திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்தப் படத்தில் ராஜராஜ சோழனின் அக்கா கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் திரிஷா. தற்போது திரிஷா தனது 67வது படமாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இது தளபதி விஜய்க்கும் 67வது படம் என்பதால் இருவரும் இணைந்திருப்பது இருவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால் காஷ்மீருக்கு சென்று இருக்கிறார் திரிஷா. அங்கிருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜயுடன் இணைந்து கில்லி படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். மீண்டும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதியுடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த 15 ஆண்டுகளில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் இந்த சூப்பர் ஹிட் ஜோடிகள் இருவரும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் திரிஷா காஷ்மீரில் படப்பிடிப்புகள் தொடங்கிய மூன்றே நாட்களில் சென்னை திரும்பி இருந்தார். இதனால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சனை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பி விட்டிருந்தனர். ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காஷ்மீருக்கு செல்வது போலவும், அங்கு ஹோட்டல்களில் சாப்பிடுவதும் போன்ற புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகள் பரப்பும் நபர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார் திரிஷா.

இந்த நிலையில் ஒரு வார ஓய்வுக்கு பின்னர், மீண்டும் காஷ்மீர் சென்றுள்ள அவர் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால் லியோ படக் குழுவினருடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். படத்தில் பணியாற்றும் பெண்கள் அனைவருடனும் சேர்ந்து சிகப்பு நிற ஆடை அணிந்து கொண்டு, காஷ்மீரில் பனியில் குரூப்பாக நின்று கொண்டு, அவர் அந்த புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். அவர்கள் த்ரிஷாவிற்கு பூங்கொத்து பரிசாக வழங்கியிருக்கின்றனர். அந்த புகைப்படங்களை பகிர்ந்த திரிஷா எனது காதலர் தினம் இப்படியாக சென்றது என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.