Categories: சினிமா

தில்லானா தில்லானா இவ தித்திக்கின்ற தேனா..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை மீனா..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மீனா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருக்கிறது. தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று கூறினால் அது இன்றுவரை மீனா தான். அப்படி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் இவர் கதாநாயகியாக நடித்து விட்டார்.

தில்லானா தில்லானா இவ தித்திக்கின்ற தேனா..! போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை மீனா..! 1

தற்போது இவரது மகளையும் தன்னை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். இது மீனாவின் வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட்டது. அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மீனா குறித்த வதந்திகள் இணையத்தில் வெளியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது இவர் தீபாவளியை முன்னிட்டு போட்டோஷூட் எடுத்து உள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்