Categories: சினிமா

இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நடிகை பூர்ணா.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

பிரபல திரைப்பட நடிகை பூர்ணா முஸ்லிம் தொழிலதிபரை மணந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும் படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார் தமிழில் பூர்ணா நடிக்கும் முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நடிகை பூர்ணா.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

முனியாண்டி விலங்கியல் படத்தை தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

அவுனு படத்தில் பேயாக நடித்ததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரை திகில் படங்களில் நடிக்க வைக்க வழிவகுத்தது. ராஜூ காரி காதி (2015) இல் பேயாக நடித்ததற்காக மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, படம் பேசும் என்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்