சூர்யாவுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய ராதிகா.! மரண குத்தாட்டம் போட்ட கார்த்தி.!

தமிழ் திரையுலகில் நட்சத்திர கலைக்குடும்பமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் சூர்யாவின் குடும்பத்தினர் தான். சூர்யாவின் தந்தை சிவக்குமார், பழம்பெரும் நடிகர்ஆவார். இவரது இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் தற்போது தமிழ் திரை உலகை கலக்கி வரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் முன்னணி நடிகையாக இருப்பவர். தற்போது இவர்கள் அனைவரும் இணைந்து தீபாவளியை நடனமாடி கொண்டாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதில் கார்த்திக், சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகை ராதிகாவும் தீபாவளியை நடனமாடி கொண்டாடி இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

சூர்யாவுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய ராதிகா.! மரண குத்தாட்டம் போட்ட கார்த்தி.! 1

விளம்பரம்

தீபாவளி பண்டிகை என்றாலே ஒருவித உற்சாகம் தான். புத்தாடைகள், பட்டாசுகள் என்று இந்தியாவே களை கட்டும் ஒரு விழாவாக இருக்கிறது. நாம் தீபாவளியை கொண்டாடுவதை விட நமக்கு பிடித்தமான நடிகர்கள் தீபாவளி கொண்டாடும் வீடியோக்கள் நமக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கின்றது. தீபாவளிக்கு நடிகர்களின் படம் வெளிவந்தால், முதல் ஆளாக முண்டியடித்துக் கொண்டு சென்று பார்த்த காலங்களும் உண்டு. இந்த தீபாவளிக்கு நடிகர் கார்த்திக்கின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்படம் மட்டுமே வெளியாகி இருந்தது. முன்னணி நடிகர்களின் படம் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றியதிலேயே இருந்தனர். ஆனாலும் முன்னணி நடிகர்கள் தங்கள் தீபாவளி கொண்டாடும் வீடியோக்களை பகிர்ந்து வருவதால் உற்சாகத்திலும் இருக்கின்றனர் ரசிகர்கள்.

தொடர்புடையவை  நாளுக்கு நாள் எகிறும் Followers..! நான்கே நாட்களில் உலக சாதனை புரிந்த தளபதி விஜய்.!

சூர்யாவுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய ராதிகா.! மரண குத்தாட்டம் போட்ட கார்த்தி.! 3

விளம்பரம்

அந்த வகையில் சூர்யாவின் குடும்பத்தினர் தீபாவளி கொண்டாடும் வீடியோவை தங்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். சூர்யாவின் குடும்பத்துடன் இணைந்து ராதிகாவும் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். பாடல், ஆடல் என நேற்று சூர்யாவின் வீடு களைகட்டி இருக்கிறது. இறுதியாக ராதிகா கார்த்திக் அனைவரும் சேர்ந்து பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோவை அவர்களது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..  Watch the below video..!!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment