ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது இந்த ட்ரைலர். தமிழில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலமாக பலரது உள்ளங்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அடுத்த வீட்டில் வசிப்பவர் போன்று இருப்பதாக பலரும் கூறுவதுண்டு. தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் தி கிரேட் இந்தியன் கிச்சன். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்த படம் ஜனவரி 15ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது. ஆணாத்திக்க குடும்பத்தால் அவதிப்படும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்து இருந்தது இந்த படம். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே இரண்டு மொழிகளிலும் படம் அதே பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும், சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் சின்மயி கணவர் ராகுலும் நடித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்தை, இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். புதிதாக திருமணமாகி வரும் ஒரு பெண், பழமைவாதங்களும், ஆணாதிக்கமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் படும் கஷ்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் வெளியான பின்பு ரீமேக்கிற்கு நியாயம் சேர்த்துள்ளார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sony Music South