ராதிகா சரத்குமாரின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.!

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமாரின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. கைக் குழந்தையாக இருப்பது தொடங்கி தற்போது வரை இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.

ராதிகா சரத்குமாரின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 1
பிரபல நடிகராக இருந்த நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகளாக இருக்கும் இவர், இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த ராதிகா முதல் முறையாக 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என அப்போது இருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் ராதிகா.


தற்போது விஜய் ஆண்டனியின் கொலை படத்திலும், காஜல் அகர்வாலின் கோஸ்டி படத்திலும்,ராகவா லாரன்ஸின் சந்திரமுகி பாகம் இரண்டிலும் நடித்து வருகிறார். கடைசியாக வெந்து தணிந்தது காடு, குருதி ஆட்டம், யானை, லவ் டுடே, பட்டத்து அரசன் போன்ற படங்களில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.


ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்களாகி விவாகரத்து ஆகியிருந்தது. தற்போது மூன்றாவதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும் மகள்கள், பேரன், பேத்தி என்று சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ராதிகா.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, அரசி, செல்வி, சித்தி பாகம் 2 போன்ற பல சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் “கிழக்கு வாசல்” என்கிற சீரியலில் நடிகர் விஜயின் தந்தையுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார்.


தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் பணியாற்றி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து இருக்கிறார். மேலும் பின்னணி பேசுபவராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் ராதிகா.

தற்போது ராதிகாவின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது அதில் ராதிகா கைக்குழந்தையாக இருப்பது தொடங்கி தற்போது வரை இருக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது பலரும் பார்த்திராத அந்த அரிய புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்