சினிமாவில் வந்து சாதித்தவர்களை விட , சாதிக்க நினைத்து வாய்ப்பு கிடைத்தும் சாதிக்க முடியாமல் போனவர்கள் ஏராளம். ஓரிரு ஹிட் படங்களில் நடித்தும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் field out ஆன நடிகர்கள் என்று பார்த்தல் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் திருட்டு பயலே என்ற ஹிட் படத்தின் மூலம் அனைவர்களும் அறியப்பட்ட நடிகர் ஜீவன். இவர் முதல் முதலில் யூனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார்.

ஆதனம் பிறகு இவர் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக காக்க காக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்ததோடு , ஜீவன் நடிப்பிற்கு பாராட்டுகளும் கிடைத்தது. பிறகு இவர் ஹீரோவாக நடித்த திருட்டு பயலே , நான் அவன் இல்லை ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனது. இதோடு , நான் அவனில்லை இரண்டாம் பாகமும் வெளியாகியிருந்தது. இவர் நடித்ததில் இந்த படங்கள் மட்டுமே மக்களால் அறியப்பட்டது.

இவர் இறுதியாக அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பிளாப் ஆனது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஜீவன். தற்போது இவர் அசரீரி , மற்றும் பாம்பாட்டம் ஆகிய பங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படங்களின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பாரா ஜீவன் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
