தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ராஷ்மிக்கா தற்போது தமிழிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சுல்தான் படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை, பின்னர் தளபதிக்கு ஜோடியாக இவர் நடித்த வாரிசு திரைப்படம் மிகப்பெரிய அளவு வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூலம் ராஷ்மிக்கா தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார்.

தற்போது தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா தற்போது விபத்து ஒன்றில் சிக்கி இருப்பதாக கூறி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த பதிவில் கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி விட்டதாகவும், தற்போது மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறி உள்ளார். மேலும் நாளைக்கு இருப்போமான்னு தெரியல அதுவரை சந்தோசமாக இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.
View this post on Instagram