பாடகி Suchitra மீது போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை..! அதிர்ச்சியில் சினிமா உலகம்..!

முன்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சுசித்ரா. பல பாடல்கள் இவர் பாடியதாலேயே ஹிட் ஆகி இருக்கிறது. இவர் தற்போது சினிமாவை விட்டு முழுவதும் விலகி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது வரை அதற்கு இவர் காரணம் இல்லை, அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் தான் காரணம் என கூறி வருகிறார்.

பாடகி Suchitra மீது போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை..! அதிர்ச்சியில் சினிமா உலகம்..! 1

விளம்பரம்

மேலும் சில காலமாக பேட்டியளிக்காமல் இருந்த சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டியில் மிகப்பெரிய பிரபலங்கள் பெயர்களை இழுத்து அவர்கள் வீட்டு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறி இருந்தார். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் ஓரினசேர்கையாளர் என்றும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் சுசித்ரா. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மேலும் நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி நடத்தியாகவும் சுசித்ரா கூறி இருந்தார்.

தொடர்புடையவை  நேற்று இரவு நடந்த பர்த்டே பார்ட்டி.! மகள் அக்ஷராவுடன் செம்ம குத்தாட்டம் போட்ட ஆண்டவர்.!

பாடகி Suchitra மீது போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை..! அதிர்ச்சியில் சினிமா உலகம்..! 3

விளம்பரம்

சுசித்ராவின் இந்த பேட்டி குறித்து அறிந்த நடிகை ரீமா கல்லிங்கல், சுசித்ரா தன்மீது ஆதாரம் இல்லாத பொய் குற்றசாட்டை கூறி இருக்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொச்சி போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment