Categories: சினிமா

மகனின் 9வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை சினேகா..! குழந்தைகளுக்கு உணவு வழங்கி நெகிழ்ச்சி செயல்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. 90களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ளார் இவர். ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகனின் 9வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை சினேகா..! குழந்தைகளுக்கு உணவு வழங்கி நெகிழ்ச்சி செயல்..! 1

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாத இவர் குடும்ப வாழ்க்கையை மட்டும் கவனித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கோட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து உள்ளார். வசீகரா படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.

தற்போது இவரின் மகனின் 9வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர் சினேகா மற்றும் பிரசன்னா.ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு உணவும் வழங்கி உள்ளார். சினேகாவின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது. ரசிகர்கள் சினேகாவின் மகனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்