சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வந்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். வெள்ளித்திரையில் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகியவர் இவர். பின்னர் வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளார். இவர் நடித்த கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி மற்றும் தங்கம் என சீரியல்களில் நடித்து கலக்கி இருந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகை ஸ்ரீதேவி அசோக். இந்த தொடரின் மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். பின்னர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். தற்போது இவருக்கு அண்மையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது.

தற்போது குடும்பத்துடன் ஸ்ரீ தேவி அசோக், திருப்பதி கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.ரசிகர்கள் இந்த புகைப்படங்களில் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram