தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். பலவெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அசத்தி உள்ளார். அன்று முதல் இன்றுவரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஒரே நடிகர் என்றால் அது விஜயகுமார் தான். நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஜயகுமார். இவரின் மகன் மற்றும் மகள்கள் என அனைவரும் சினிமா துறையில் தான் உள்ளனர்.

அந்த அளவுக்கு சினிமாவின் மீது அதிக காதலை கொண்ட குடும்பமாக இருக்கிறார்கள் விஜயகுமார் குடும்பத்தினர். ஏற்கனவே விஜயகுமார் மகன் அருண் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். அதே சமயம், மகள் ஸ்ரீ தேவியும் தமிழில் பல படங்களை நடித்து அசத்தியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ தேவி விஜயகுமார். இவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.