Categories: சினிமா

பாலியல் குற்றசாட்டு குறித்து ரஜினி குடும்பத்துக்கிட்ட கேளுங்க..! நடிகை விசித்திரா ஆவேசம்..!

வெளியிட்டது

நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரால் தற்போது மலையாள சினிமாவே ஆட்டம் கண்டு இருக்கிறது. பல முன்னணி நடிகர்கள் மீதும் தொடர்ந்து பாலியல் புகாரை கொடுத்து வருகின்றனர் நடிகைகள். இதற்காக பலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது கேரளா சினிமா ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.இந்நிலையில் கேரளா அரசே தற்போது ஹேமா கமிட்டியை தொடங்கி நடிகைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றது.

பாலியல் குற்றசாட்டு குறித்து ரஜினி குடும்பத்துக்கிட்ட கேளுங்க..! நடிகை விசித்திரா ஆவேசம்..! 1

பல முன்னணி நடிகர்களும் இதனை பற்றி பேச மறுத்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பியதற்கு பேச மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பிரபல நடிகையான விசித்திரா பேட்டியில் இதுகுறித்து பேசிய பொழுது, பாலியல் குற்றசாட்டு குறித்து ரஜினியிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார் , அவரின் மனைவி மற்றும் மகளிடம் கேளுங்கள் என கூறி உள்ளார்.

முன்னணி நடிகர்கள் இதுபற்றி பேச மறுப்பு தெரிவித்தால் அவர்களிடம் சென்று இதனை பற்றி கேட்க முடியாது எனவும், சம்பவம் நடந்த போதே சொல்லியிருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் நான் எனக்கு நடக்கும் போதே இதை பற்றி நடிகர் சங்கத்திடம் தெரிவித்து இருந்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்து உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்