Categories: சினிமா

தல அஜித்தை விட சூப்பரா ஆடுறீங்க… ஆலுமா டோலுமா பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட அதிதி

வெளியிட்டது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி இருந்ததால் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். முதல் படத்திலேயே கார்த்திக் ஜோடியாகவும், சூர்யாவின் தயாரிப்பில் நடித்திருக்கிறார். கிராமத்து பெண்ணாக அவர் பாவாடை தாவணியில் தோன்றி நடித்ததால் பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர். முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரபலமாகிவிட்டார். மேலும் முதல் படம் வெளியாவதற்கு முன்பே பல படங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தல அஜித்தை விட சூப்பரா ஆடுறீங்க... ஆலுமா டோலுமா பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட அதிதி 1

மருத்துவம் படித்துள்ள அதிதிக்கு சிறுவயதிலிருந்தே பாடவும், பரதநாட்டியமும் கற்றும் இருக்கிறார் கர்நாடக இசை மட்டும் இல்லாமல் ஹிந்துஸ்தானி, ராப் போன்ற இசைகளையும் கற்று இருக்கிறார். தன்னுடைய திறமை வீட்டில் இருக்கும் ஐந்து பேருடன் நின்று விடக்கூடாது என்பதால், திரைத்துறைக்கு வந்து தன்னுடைய திறமையை பலருக்கும் காட்ட வேண்டும் என்று அவர் திரைத்துறைக்கு வந்துள்ளதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். மேலும் தான் தன்னுடைய தந்தையின் சிபாரிசால் மட்டுமே வரவில்லை, தன்னுடைய திறமையால் தான் வந்திருக்கிறேன், அப்படியே தந்தை சிபாரிசு செய்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் திறமை இருந்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் திரைத்துறையில் நிற்க முடியாது என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.

தன்னுடைய குறும்புத்தனங்கள் நிறைந்த செயல்களால் பலரையும் ஈர்த்திருக்கிறார் அதிதி. அந்த வகையில் தற்போது தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் பேண்ட் சட்டையுடன் அவர் மேடை ஒன்றில் ஏறி அஜித்தின் பாடலான ஆலுமா டோலுமா பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டு இருக்கிறார். ஏற்கனவே விருமன் பட பாடல் வெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து அவர் ஆடி இருந்தார். இது போல் அவர் மேடையில் செய்யும் குறும்புகள் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆலுமா டோலுமா பாடலுக்கு அஜீத் அவர்கள் போலவே அவர் ஆடி இருப்பது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்