கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் விஷ்ணு விஷால். அதை தொடர்ந்து இவர் பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று விருதுகளையும் குவித்தது. இவர் தனது கல்லூரி தோழியை 2011 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் விஷ்ணு விஷாலும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ சூட் ஒன்று வைரலானது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போல இவரும் ஆடை இல்லாமல் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். இதை அவரது மனைவி ஜுவாலா கட்டா எடுத்ததாகவும் கூறினார். அவர் மீது வழக்குகள் பதியப்படக் கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவர் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளிக்கும் போது, அது நீங்கள் நினைப்பது போல் போட்டோ ஷூட் இல்லை. சாதாரணமாக தூங்கி எழுந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்று விளக்கம் அளித்து இருந்தார். இருந்தபோதும் அவரின் இந்த செயல் கண்டனங்களை எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது மகன் ஆரியன் பெயரில் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவர் அந்த பதிவில், என் மகனின் பெயரில் அடுத்த படத்திற்கான தலைப்பு இருக்கிறது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தலைப்பாக இருக்கும் என்றும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
My son now has my film in his name.. This is going to be an unforgettable title for me ❤️
First look and motion poster of #Aaryan.
Also starring @selvaraghavan, @shraddhasrinath, @vanibhojanoffl.
Directed by @adamworx.
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) September 2, 2022
Twitter Original Source From: Vishnu Vishal