தலைவன் STR-ன் தெறி நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் வெளியானது..!

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாநாடு படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சிம்பு. அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு முன்பு மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் சிம்பு இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற்று வருகிறது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைவன் STR-ன் தெறி நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் வெளியானது..! 1

விளம்பரம்

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேல்ஸ் யூனிவர்சிட்டியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதற்காக பல பகுதிகளில் இருந்தும் சிம்பு ரசிகர்கள் சென்னைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர். இதற்காக செட்டுகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஐசரி கணேசனின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. ஐசரி கணேஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு கமலஹாசனை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இதில் பட வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடையவை  ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

தலைவன் STR-ன் தெறி நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் வெளியானது..! 3

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வெளியாகியிருக்கிறது அந்த ட்ரெய்லரை நீங்களும் காண.. Watch the video below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Think Music India

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment