Categories: சினிமா

மதுர வீரன் பாடலுக்கு கார்த்திக்குடன் இணைந்து மேடையில் செம்ம கியூட் ஆக ஆடிய அதிதி

வெளியிட்டது

சங்கரின் மகள் அதிதியும் நடிகர் கார்த்திக்கும் மேடையில் போட்ட குத்தாட்டம் தற்போது வைரலாகி வருகிறது. கோலிவுட்டை கலக்கி வரும் ஒரு பெயர் தான் அதிதி சங்கர். இவர் இயக்குனர் சங்கரின் இளைய மகளாவார். மருத்துவம் படித்திருந்த போதிலும் நடிக்கும் ஆர்வத்தால் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருந்த விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தாவணி சேலையில் இவர் செய்யும் குறும்புகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது. அவர் நிஜத்திலும் அப்படித்தான். மேடையிலும் சரி பேட்டியின் போதும் சரி, மிகக் குறும்பாக அவர் பதில் அளிக்கும் விதமும், அவர் செய்யும் சேட்டைகளும் பார்ப்பதற்கே ரசிக்கும்படியாக இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மதுர வீரன் பாடலுக்கு கார்த்திக்குடன் இணைந்து மேடையில் செம்ம கியூட் ஆக ஆடிய அதிதி 1

படம் வெளியாவதற்கு முன்பாகவே பல ரசிகர் பட்டாளங்களை அவர் ஈர்த்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. படம் வெளியான பின்பு அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் அதிகரித்துள்ளது. மேலும் அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆக்கியுள்ளார். இவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் அதிகமாக இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார் அதிதி. அதிதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் விருமன் திரைப்படம் உலகெங்கிலும் பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வெற்றி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக், முத்தையா போன்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனமும் செய்தனர்.

இந்த நிலையில் விருமன் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றில் அதிதியும் கார்த்தியும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் இருவரும் ஒன்றாக மிக க்யூட்டாக நடனம் ஆகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிதி ஏற்கனவே பரதம், இசை போன்றவற்றை முறையாக கற்றவர் ஆவார். மேலும் விருமன் படத்திலும் ஒரு பாடலையும் அவரே பாடியிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலிலும் அவர் பரதநாட்டியம் ஆடி இருக்கிறார். இவ்வாறு அனைத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார் அதிதி. இந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்