மிகப்பெரிய நடிகரின் படத்தில் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் நடிகை.. அடித்த ஜாக்பாட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த நாடகத்தின் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் காரணமாக பாகம் 2 எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற மருமகளின் கனவை மாமியார் எப்படி நிறைவேற்றப் போகிறார்? அதற்கு கணவர் எப்படி உறுதுணையாக இருக்கப் போகிறார்? என்பது பற்றிய கதை. இது ஹிந்தி நாடகம் ஒன்றின் தமிழ் ரீமேக்கான என் கணவர் என் தோழர் என்ற கதையை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் அந்த நாடகத்தில் மாமியார் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் மாமியார் மருமகளை மிகக் கொடுமை செய்வது போல் காட்டப்படுகிறது. எதற்கெடுத்தாலும் அதற்கு தனது மருமகள் சந்தியா தான் காரணம் என்று அவர் கூறும் வசனம் சிலரை எரிச்சல் அடையவும் வைத்திருக்கிறது.

மிகப்பெரிய நடிகரின் படத்தில் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் நடிகை.. அடித்த ஜாக்பாட் 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் ஆரம்பத்தில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா. இவர் நாடகத்திலிருந்து விலகியதன் காரணமாக சந்தியாவாக ரியா விஸ்வநாதன் நடித்து வருகிறார். இதில் மாமியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரவீனா நடித்து வருகிறார். இவர் ஒரு மலையாள நடிகை ஆவார். இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. தனுஷ் நடிப்பில் அடுத்த உருவாகி வரும் படம் தான் வாத்தி. இது தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடையவை  தோள்பட்டையில் ஏற்பட்ட பயங்கர காயம்.! நடக்க முடியாமல் நடந்து செல்லும் சூர்யா.! வைரலாகும் வீடியோ.!

மிகப்பெரிய நடிகரின் படத்தில் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் நடிகை.. அடித்த ஜாக்பாட் 3

விளம்பரம்

இந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியலின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரவீனாவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இவர் ஏற்கனவே மலையாளம் மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவேதான் அவர் சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். மீண்டும் அவருக்கு வாத்தி படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் தனுசுடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய நடிகரின் படத்தில் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் நடிகை.. அடித்த ஜாக்பாட் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment