ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.!

ஹைதராபாத்தில் நடந்த வாரிசு படத்தின் வெற்றி விழாவை கேக் வெட்டி படக் குழுவினர் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதியின் 66 ஆவது படமான வாரிசு திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இந்த படத்தை தில் ராஜு தனது வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இருந்தார். இந்த படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் படம் தமிழ் திரையுலகின் மற்றொரு உச்ச நடிகராக இருக்கும் தலயின் துணிவு படத்துடன் நேரடியாக மோதியிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 7 நாட்கள் முடிவில் படம் 210 கோடி வரை வசூலிக்க இருந்ததாக அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தது. இது சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.! 1
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் இதை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சில விமர்சகர்களும் இந்த வசூல் நிலவரம் குறித்து தங்களது மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். துணிவு படம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் வாரிசு படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. கடந்த 16ஆம் தேதி வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை ஈசிஆர் இல் உள்ள தனியார் விடுதியில் வைத்து படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் தளபதி விஜய். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வரவில்லை. இயக்குனர் வம்சி, சரத்குமார், ஷாம், சங்கீதா போன்ற படக் குழுவினர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மகன் மகளுடன் வெளிநாட்டில் விடுமுறையை கழிக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா.! வெளியான புகைப்படங்கள்.!

ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.! 3

ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.! 7

ஹைதராபாத்தில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக சக்ஸஸ் மீட் கொண்டாடிய தளபதி.! இதோ புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

அந்த விழாவில் பேசியிருந்த வம்சி, தன்னை தெலுங்கு இயக்குனர் என்று சொல்வது காயப்படுத்துவது போல் உள்ளது. நான் ஒரு நல்ல மனிதன் இன்றைக்கு தமிழ் மக்கள் தங்கள் நெஞ்சில் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே எனக்கு போதும் என்று உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றி விழாவை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளபதியுடன் சேர்ந்து இயக்குனர் வம்சி பாடல் ஆசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். படக்குழுவினருக்கு ராஷ்மிகா தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment