பிரபல இயக்குனரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கர் தற்போது லியோ பட பாடலுக்கு காருக்குள் அமர்ந்து கொண்டு vibe செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகள் அதிதி மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைத்துறைக்கு வந்தார். முதல் படமே முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டாவது படமாக மாவீரன் படத்தில் நடித்த முடித்து இருக்கிறார். அடுத்தபடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் விருமன் படத்தில் மதுரவீரன் என்கிற பாடலையும், மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டையில என்கிற இரண்டு பாடல்களையும் பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். நடிப்பது, பாடுவது, பரதநாட்டியம் ஆடுவது என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதிதி சங்கர்.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் லியோ படத்தில் வரும் “நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு காருக்குள் அமர்ந்து கொண்டு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோவை சுமார் 17 லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இரண்டரை லட்சம் லைக்குகளையும் அந்த வீடியோ குவித்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Video Credits: Aditi Shankar