ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள அரவிந்த் சாமி.. ரெண்டகம் படத்தின் ட்ரைலர் வெளியானது

தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நாயகராக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் ரெண்டகம். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இவர் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் முதன் முதலாக அறிமுகமாகினார். பின்னர் ரோஜா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தைப் பிடித்தார். பின்னர் பம்பாய் போன்ற திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் இந்திரா, மின்சாரக்கனவு என்சுவாச காற்றே, அலைபாயுதே போன்ற படங்களில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடல், தனி ஒருவன், போகன் போன்ற படங்களிலும் அவர் நடித்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள அரவிந்த் சாமி.. ரெண்டகம் படத்தின் ட்ரைலர் வெளியானது 1

விளம்பரம்

தற்போது அரவிந்த்சாமியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ரெண்டகம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் இரண்டாம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில சென்சார் பணிகளின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. தற்போது இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடையவை  கராத்தே செய்கிறேன் என்று தலையில் தீப்பிடித்த மன்சூர்..சக்கு சக்கு பத்திக்கிச்சு என்று கலாய்த்து விட்ட ப்ளூ சட்டை

ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள அரவிந்த் சாமி.. ரெண்டகம் படத்தின் ட்ரைலர் வெளியானது 3

விளம்பரம்

அரவிந்த்சாமி, குஞ்சப்பா போபன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கௌதம் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் கென்னடி என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Goodwill Entertainments

விளம்பரம்

Leave a Comment