Categories: சினிமா

இந்திய பெருங்கடலை வெற்றி கொண்டானா அகிலன்? முழு திரைவிமர்சனம் இதோ.! TamilGlitz Rating (?/5)

வெளியிட்டது

ஜெயம் ரவி நடிப்பில் இன்று உருவாகி இருக்கும் அகிலன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குனருடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து அகிலன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை பார்க்கலாம். அகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி துறைமுகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வர்த்தகத்தின் தலைவராகவும் கிரேன் ஆபரேட்டர் ஆகவும் இருக்கிறார். இந்திய பெருங்கடல் வழியாக அனைத்து சட்டவிரோதமான செயல்களையும் செய்து வருகிறார் கபூர். இவருக்கு கீழே வேலை செய்பவர் பரந்தாமன். இவர் தமிழ்நாட்டின் வழியாக சட்டவிரோதமான செயல்களை செய்து வருகிறார். இவர்கள் இருவரின் கீழ் திறமையான அடியாளாக வேலை பார்த்து வருபவர் தான் அகிலன்.

இந்திய பெருங்கடலை வெற்றி கொண்டானா அகிலன்? முழு திரைவிமர்சனம் இதோ.! TamilGlitz Rating (?/5) 1

இதில் தமிழ்நாட்டின் சட்ட விரோத செல்களை செய்து வரும் பரந்தாமனுக்காக கொலை கொள்ளை கடத்தல் என பல செயல்களை செய்து வருகிறார் அகிலன். துறைமுகத்தில் வேலை பார்த்துக் கொண்டே சட்டவிரோதமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அகிலன், எப்படியாவது முக்கிய நபரான கபூரை பார்க்க வேண்டும் என்று பல விதமான செயல்களை செய்து வருகிறார். கப்பூரை சந்திக்கும் அவருக்கு பெரிய ரிஸ்க்கான வேலை ஒன்றை கொடுக்கிறார். இதை செய்து முடிப்பவர் யாரோ அவர்தான் இந்த இந்திய பெருங்கடலின் ராஜா என்று கபூர் அறிவிக்கிறார். இந்த காரியத்தை கையில் எடுத்த அகிலன் அதை திறம்பட செய்து முடிக்கிறார். இதனால் அகிலன் பல எதிரிகளையும் பகையையும் சம்பாதிக்கிறார். இதன் பின்னர் அகிலனுக்கு என்ன நடந்தது?/ எதற்காக அகிலன் இதையெல்லாம் செய்கிறார்? அவருடைய உண்மையான நோக்கம் என்ப? என்பது தான் படத்தின் மீதிக் கதை ஆரம்பத்தில் துறைமுகத்தில் நடக்கும் காட்சிகளை நம்பும்படியாகவும் மிகுந்த சுவாரசியமாகவும் காட்டியிருக்கிறார் கல்யாண் கிருஷ்ணன்.


ஆனால் அகிலனின் தனிப்பட்ட கதையையும் அவர் எதற்காக இவ்வாறு எல்லாம் செய்கிறார் என்பது குறித்து நோக்கத்தை விளக்கும்போது சுவாரஸ்யம் குறைய தொடங்குகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை எளிதில் கணிக்கும் விதத்தில் இருக்கிறது. தனி ஒரு ஆளாக இருந்து மொத்த கதையையும் தாங்கி இருக்கிறார் ஜெயம்ரவி. முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் ஜெயம் ரவி. வழக்கம் போல் பிரியா பவானி சங்கர் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆனால் இரண்டாவது கதாநாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மற்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். முக்கிய வில்லனாக வரும் தரும் கதாபாத்திரத்திற்கு சரியான வில்லத்தனங்களை கொடுக்கப்படவில்லை, மக்களின் பசியை தீர்க்க கப்பல்களை அகிலன் பயன்படுத்துகிறார் என்ற நல்ல நோக்கத்தை காட்டிய விதம் அந்த அளவிற்கு ரசிக்கும்படியாக இல்லை.


வசனங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. அகிலன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற உதவும் போலீசாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஜெயம் ரவியின் லுக்கும் அவர் பாடி லாங்குவேஜ், வசனம் பேசும் இடங்கள் அனைத்தையும் படங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறது. முதல் பாதி சென்ற வேகம் அளவிற்கு கூட இரண்டாவது பாகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மற்றபடி படம் ஒருமுறை பார்க்கும் படியாக இருக்கிறது. துறைமுகத்தை சிறப்பாக காட்டிய குழுவினருக்கும் பாராட்டுக்கள் கண்டிப்பாக தெரிவித்தே ஆக வேண்டும். மேலும் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. உலக அரசியல் மற்றும் பசி வறுமை குறித்து பேசிய இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். மேலும் இயக்குனர் எஸ்பி ஜனநாதனுக்கு இவர் இந்த படத்தை சமர்ப்பணமாக கொடுத்திருப்பது வரவேற்பதற்காக இருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷன், எடிட்டிங், வசனம் என படத்திற்கு பல பலங்கள் இருந்த போதிலும், படத்தின் 2ம் பாகத்தின் தொய்வு பெரும் மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இந்திய பெருங்கடலின் ராஜாவிற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5

‘youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்