அகிலன் திரைப்படம் நல்லா இல்லையா? படம் குறித்து பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். இந்த திரைப்படம் குறித்து தற்போது பொதுமக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஒரே ஒருமுறைதான் இந்த படத்தை பார்க்க முடியும். மற்றபடி பெரிய அளவில் எதுவும் இல்லை என்று போன்ற கருத்துக்களையே பொதுமக்கள் கூறி வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஜெயம்ரவி. இவர் திரைத்துறைக்கு வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் 25 படங்களுக்கு உள்ளாகவே தான் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது. ஜெயம் ரவிக்கும் இந்த படத்தின் மூலமாக மவுசு கூடியது. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அகிலன் திரைப்படம் நல்லா இல்லையா? படம் குறித்து பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 1
இரண்டாவது முறையாக கல்யாண் கிருஷ்ணனுடன் மீண்டும் ஜெயம் ரவி கைகோர்த்து இருந்தார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஸ்கீரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தார். கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. அழுத்தமான வசனங்களுடனும் துறைமுகத்தில் நடக்கும் கடத்தல் பற்றியும் இந்த படம் இருக்கும் என்று ட்ரெய்லர் கவனத்தை ஈர்த்தது. இயக்குனரின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் பல ஆழமான கருத்துக்களை கொண்டிருப்பதாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கருத்து தெரிவித்தனர். உணவு அரசியலை மையமாக வைத்தும், பசியை பற்றியும் இந்த படம் பேசி இருப்பதாக படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மௌன ராகம் தருணுக்கு திடீரென நடந்த நிச்சயதார்த்தம்..! பொண்ணு யாருனு தெரியுமா?

அகிலன் திரைப்படம் நல்லா இல்லையா? படம் குறித்து பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 3

இன்னும் சிலரோ படம் நன்றாக இருக்கிறது, ஜெயம் ரவிக்காக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் இல்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள். நீங்களும் அவர்கள் கூறிய அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Chennai Waalaa

விளம்பரம்

Leave a Comment