ராணி கெட்டப்பில் ஐஸ்வர்யா ராய்! வைரலாகும் பொன்னியின் செல்வன் shooting spot புகைப்படம்

வெளியிட்டது

இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் கல்கி அவர்கள் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாகும் படம் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2. மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிறது.

ராணி கெட்டப்பில் ஐஸ்வர்யா ராய்! வைரலாகும் பொன்னியின் செல்வன் shooting spot புகைப்படம் 1

2022 இல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரகுமான், கிஷோர், நிழல்கள் ரவி எனப் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டிசம்பர் 2019 இல் ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி மற்றும் புதுச்சேரியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது மத்திய பிரதேசத்தில் ஓர்ச்சாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் “நந்தினி” , “மாந்தகினி” என இரு வேடங்களில் நடித்து வருகிறார். அவர் ராணி கெட்டப்பில் ஷூட்டிங் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளத்தில் லீக் ஆகிவிட்டது. தற்போது அது வைரலாகி வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்