நடிகர் விமலை குடும்பத்தோடு சென்று சந்தித்த விஜய் சேதுபதி! வெளிவந்த அழகான புகைப்படம்

முதன்முதலில் கில்லி படத்தில் துணை நடிகராக அறிமுகமான “விமல்” பசங்க, களவாணி போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். இவர் கிரீடம், குருவி, பந்தயம் படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ வாகை சூட வா’, ‘பசங்க’, ‘காஞ்சிவரம்’ என அவர் நடித்த மூன்று படங்களும் தேசிய விருது பெற்றவை. கடந்த 20 வருடங்களில் மூன்று தேசிய விருதுகள் பெற்ற படத்தில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை உடையவர்.

நடிகர் விமலை குடும்பத்தோடு சென்று சந்தித்த விஜய் சேதுபதி! வெளிவந்த அழகான புகைப்படம் 1

‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்தும் தயாரித்துமுள்ளார். தற்போது லக்கி, குலசாமி, மஞ்சள் குடை, துடிகரங்கள், எங்க பாட்டன் சொத்து எனப் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘சண்டகாரி’ படத்தை வெளியிட தாமதமாகி வருகிறது. களவாணி படத்தை போன்றே அக்ஷயா என்கிற பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவருடைய மகன் பிறந்தநாளை கொண்டாடினார். அதில் விஜய் சேதுபதி தன் மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் பங்கேற்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "தண்ணீர் பாட்டில் முதல் டிரஸ் கோட் வரை"!! அசத்தலாகவும், ஆடம்பரமாகவும் நடைபெறும் விக்னேஷ் நயன்தாராவின் மெஹெந்தி ஃபங்க்ஷன்!!!
நடிகர் விமலை குடும்பத்தோடு சென்று சந்தித்த விஜய் சேதுபதி! வெளிவந்த அழகான புகைப்படம் 3

“கூத்துப்பட்டறையில்” இருவரும் சேர்ந்து பயிற்சி பெற்றனர். அன்று முதல் இருவர் நல்ல நண்பர்கள். ஆதலால் குடும்பத்துடன் சேர்ந்து விழாவிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. விமலும் விஜய் சேதுபதியும் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விமலை குடும்பத்தோடு சென்று சந்தித்த விஜய் சேதுபதி! வெளிவந்த அழகான புகைப்படம் 5
விளம்பரம்

Leave a Comment