விஜய் டிவி-ல் ஒளிப்பரபாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில் அப்படி ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. கடந்த மூன்று சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிக்ழச்சி 4-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து கடந்த வாரம் முதல் அறிமுகமாகி வந்தனர். இதற்கிடையே தற்போது இந்த வாரம் புதிய ஜோடிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். Video given below.

ஆம், அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான அஜய் தனது மனைவியுடன் புதிய ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. அஜய் சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அஜய் கிருஷ்ணா தற்போது பின்னணி பாடகராக திகழ்கிறார்.
இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.இப்பொது திருமணம் முடிந்து இருவருக்கும் 45 நாட்களை மட்டுமே தாண்டியுள்ள நிலையில் இருவரும் ஜோடியாக Mr. & Mrs. Chinnathirai நிகழிச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த கலகல ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. அந்த விடியோவை நீங்களும் காண…..
Video Courtesy – VijayTelevision