Categories: சினிமா

காரில் ஏறும் போது தடுக்கி விழுந்த அஜித் மகள்.! ஓடி வந்து பிடித்த தாய் மாமா ரிச்சர்ட்.!

வெளியிட்டது

சென்னையில் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக வந்த அஜித்தின் மகள் தடுக்கி விழுந்த போது, அவரது தாய் மாமன் ரிச்சர்ட் அவரை தாங்கி பிடித்துள்ள வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். தமிழில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவரை அவரது ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. அஜித்தின் படம் வெளியாகும் பொழுது பெரிய திருவிழா போல் ஆக்கி விடுவார்கள் அவரது ரசிகர்கள். கொரோனா காலகட்டம் என்பதால் மூன்று ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

காரில் ஏறும் போது தடுக்கி விழுந்த அஜித் மகள்.! ஓடி வந்து பிடித்த தாய் மாமா ரிச்சர்ட்.! 1

 

இதனால் கோபமான அஜித் ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரையும் இயக்குனர் எச் வினோத்தையும் திட்டி தீர்த்துவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் துணிவு என்ற படத்தில் அதே காம்பினேஷனில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். இந்த படத்தையும் போனிகபூரே தயாரிக்க, ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் சண்டை காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாக தெரிகிறது. அவ்வப்போது அஜித் குறித்த புகைப்படங்கள் மட்டுமே இணையதளத்தில் வெளியாகி வந்தது. மேலும் அஜித் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியும், மகள் அனோஷ்காவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னைக்கு உள்ள ஒரு திரையரங்குக்கு வருகை புரிந்தனர். அங்கு காரை விட்டு இறங்கிய போது அஜித்தின் மகள் அனோஷ்கா தடுக்கி விழுந்து விட்டார். அப்போது அவரின் பாதுகாப்புக்காக நின்றிருந்த அவரின் தாய் மாமா ரிச்சர்ட் உடனடியாக தாங்கி பிடித்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தாய்மாமின் பாசம் என்றால் சும்மாவா என்று பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்