ஒரு நடிகருக்கு முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனும் வராது, அவர் சோக காட்சிகளிலும் அப்படித்தான் நடிப்பார், சந்தோசமான காட்சிகளிலும் அப்படித்தான் நடிப்பார், அம்மா செத்தாலும் அப்படித்தான் நடிப்பார் என்று ஜெயம் ரவி கூறியதாக விக்ரம் ஒரு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார். ஜெயம் ரவி கூறிய அந்த நடிகர் யார்? என்பது குறித்தான விவாதம் தற்போது இணையத்தில் எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்திருந்தவர் நடிகர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனுக்காக இந்த குழு பல ஊர்களுக்கு பிரமோஷன் பணிகளுக்காக சென்றிருந்தது் பின்னர் கடைசியாக இவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தனர். அதில் விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி கார்த்திக் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதில் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த பேட்டியில் ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது நடிகர் கார்த்திக், விக்ரமுடைய மகன் துருவ் விக்ரம் ஒரு முறை ஷூட்டிங் வந்தபோது, ஜெயம் ரவியை பார்த்து ஹாய் பொன்னியின் செல்வன் என்று கூறியதாகவும், அதற்கு பதிலுக்கு ஜெயம் ரவி ஹாய் கென் செல்வன் என்று கூறினார். விக்ரமின் இயற்பெயர் கென் என்பதால் அவ்வாறு ஜெயம் ரவி கூறியதாக கார்த்திக் தெரிவித்தார். மேலும் ஜெயம் ரவி பற்றி விக்ரம் ஒரு கருத்தை கூறினார். தானும் ஜெயம் ரவியும் ஒரு முறை விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு நடிகரைப் பற்றி கூறினார் என்று விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயம் ரவி நடுவில் புகுந்து அண்ணா அண்ணா வேண்டாம் என்று தடுத்தார்.
Chiyaan's Direct attack on @urstrulyMahesh !🤣🍉🔥#Varisu pic.twitter.com/5CvZs7d9Qh
— ⱽʲ VIPER ♠️ (@VJViper_jd7) October 5, 2022
ஆனால் விக்ரமோ இல்லை இல்லை நான் அந்த நடிகரின் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொல்லி, ஜெயம் ரவி கூறியதாக சில கருத்துக்களை கூறினார். அதில், ஒரு நடிகர் இருக்கிறார், அவர் சந்தோஷம் என்றாலும் ஒரே எக்ஸ்பிரஷன் தான் கொடுப்பார், சோகம் என்றாலும் ஒரே எக்ஸ்பிரஷன் தான், ஏன் அம்மா செத்தால் கூட ஒரே எக்ஸ்பிரஷன் தான் கொடுப்பார் இவரெல்லாம் எப்படி நடிக்க வந்தார் என்று ஜெயம் ரவி தன்னிடம் கூறியதாக விக்ரம் கூறினார். ஏற்கனவே காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜெயம்ரவி பங்கு பெற்றிருந்தபோது, அவரிடம் இதே போன்ற ஒரு கேள்வியை கேட்கப்பட்டது. இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டார் என்று யாரையாவது நீங்கள் நினைத்ததுண்டா என்று டிடி கேட்க, ஆம் என்று சொல்லி அவர் முகத்தில் எக்ஸ்பிரஷனே வராது என்று கூறினார்.
“Jayam Ravi Vijay ya sollala,, Mahesh babu va thaan sonnaru” ~ Anils😂
Meanwhile Jayamravi ~ pic.twitter.com/afAmS4vLQA
— Dαи¢ιиg яαj (@DncgRaj) October 5, 2022
இந்த பழைய வீடியோவையும், தற்போது ஜெயம் ரவி கூறியதாக விக்ரம் சொன்ன வீடியோவையும் பகிர்ந்து அவர் மகேஷ் பாபுவை தான் கிண்டல் செய்து கூறி இருக்கிறார் என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சிலரோ ஜெயம் ரவி நடிகர் விஜய் சொன்னார் என்று கிளப்பி விட்டு இருக்கின்றனர்.
Meanwhile Jayamravi about Vijay https://t.co/5UFkxl1gzH pic.twitter.com/5t0HxHl1iT
— BOOZER (@boozer_hand) October 5, 2022
Actor Jayam Ravi about my darling mabbu akka Expression😍 pic.twitter.com/cnVtEqQnpK
— MD ⚡ (@Thalapathyvj_md) October 5, 2022

youtube video code embed credits: lyca productions