தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொகுப்பாளராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய இவர் இன்று தனது கடின உழைப்பால் சினிமாவின் உச்சத்தை அடைந்து உள்ளார். படிப்படியாக தனது நடிப்பை மெருகேற்றி இன்று முன்னணி நடிகர்களுக்கு இணையாக உருவெடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். பிரபல நடிகர்கள் படங்களே வசூலுக்கு கஷ்டப்படும் போது, அதனை அசால்ட்டாக செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவருக்கு தற்போது இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாகி உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்திற்கு நல்ல விமர்சனமும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.
மேலும் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. வெளியான ஒன்பது நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 200கோடி வசூலை பெற்று சாதனை படைத்து உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

