ஓட்டுக்கு 1 பவுன் தங்க காசு..1000 பேரை அசால்ட்டாக ஏமாற்றிய பெண் சுயேட்சை வேட்பாளர் | Manimegalai

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது கணவர் துரைப்பாண்டி. மணிமேகலை 36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து தேர்தலில் இறங்கியுள்ளார். 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆம்பூர் 36 வார்டு கம்பிக்கொல்லை பகுதி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார் மணிமேகலை. இவரும் இவரது கணவர் துரைபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள 1000 மக்களை ஏமாற்றியுள்ளனர். தேர்தலுக்கு முதல் நாள் இரவு கம்பிக்கொல்லை பகுதிக்கு சென்ற துரைப்பாண்டி 1000 மக்களுக்கு ஒரு தங்க காசை கொடுத்து தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு சத்தியம் வாங்கியுள்ளார். Watch the Below Video…

விளம்பரம்

இதனை உண்மை என்று நம்பி மறுநாள் காலை ஓட்டு போட்டுவிட்டு திரும்பிய அந்த பகுதி மக்கள் கடைக்கு சென்று அந்த தங்க நாணயம் உண்மையானதுதானா என்று உரசிப் பார்த்தபோது அவை அனைத்தும் தகரம் என தெரிய வந்துள்ளது. உடனே மக்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர் மணிமேகலை மற்றும் அவரது கணவருக்கு போன் செய்துள்ளனர். போனை அனைத்து விட்டு கணவனும், மனைவியும், தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் மணிமேகலை மற்றும் துரைபாண்டி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரவில் வந்து தங்க நாணயங்களை கொடுத்து ஓட்டை வாங்கி ThugLife செய்த கணவன் மனைவியை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. Youtube Video Code Embed Credits: Polimer News

ஓட்டுக்கு 1 பவுன் தங்க காசு..1000 பேரை அசால்ட்டாக ஏமாற்றிய பெண் சுயேட்சை வேட்பாளர் | Manimegalai 1

விளம்பரம்

தேர்தலுக்கு கட்சிகள் பணம் கொடுப்பது வாடிக்கையானது தான். ஆனால் இந்த சம்பவம் சுயேட்சை தங்க காசுகள் கொடுத்து மக்களை ஏமாற்றியது, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்க்கான சான்று. அந்த வகையில் இப்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

விளம்பரம்

Leave a Comment