Good Night பட அனு மாதிரி பொண்ணு வேணும்னு கேக்குறவன் எல்லாம் கேடி பயலுங்க.! கடுப்பான அனிதா சம்பத்.!

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் குட் நைட் திரைப்படம் குறித்தும் அதில் வரும் ஹீரோயின் அனு குறித்தும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்தப் படத்தில் வரும் அனு மாதிரி தனக்கும் மனைவி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு அனிதா சம்பத் தற்போது காட்டமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். குறட்டை விடுவதால் திருமண வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து ஒரு அழகான கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில் ஓடிடியில் தற்போது வெளியாகியிருக்கிறது. ரிலீசாகி மூன்று மாதங்களை நெருங்கி வரும் நிலையில் படத்திற்கு இன்னும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனக்கும் குட் நைட் பட அனு மாதிரி மனைவி வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Good Night பட அனு மாதிரி பொண்ணு வேணும்னு கேக்குறவன் எல்லாம் கேடி பயலுங்க.! கடுப்பான அனிதா சம்பத்.! 1

இதைப் பார்த்த அனிதா சம்பத் தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு நினைக்கிற அம்புட்டு பயலும் கேடி பசங்க, “நான் என்ன பேசினாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம, நம்ம சொல்றத மட்டும் மூடிகிட்டு கேக்குற பொண்ணு வேணும்னு” பெருசா சொல்றதுக்கு பதிலா, “அனு மாறி வேணும்னு” ஷார்ட்டா சொல்றாங்க. நம்ம அனு மாதிரிலாம் இருக்க வேணாம் தங்கம்ஸ், நம்ம எதையும் சாக்ரிஃபைஸ்லாம் பண்ண வேணாம், நமக்கு பிடிச்சதை கேட்டு வாங்கிப்போம். நம்ம விருப்பத்த பிராங்க்கா சொல்லுவோம். நம்ம லைஃபை நம்ம வாழ்வோம், பாய் பிரண்ட்/ஹஸ்பண்டோட ஹாப்பியா அண்டர்ஸ்டாண்டங்காவும் வாழுவோம். நம்ம சத்தம் போட்டு பேசுற பெண்ணாக இருந்தால் கூட ஹேப்பியா வாழலாம். அனு நல்ல பொண்ணு தான் அதுக்குன்னு எல்லா பொண்ணும் அனு மாதிரி சைலன்ட்டா இருந்தா மட்டும் தான் நல்ல பொண்ணு கிடையாது.


அனி மேல உங்க பாய் பிரண்டு ரொம்ப அட்ராக்ஷனா இருந்தா அவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க என்று அந்த பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் அனுவின் புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், “இவருக்கு பாய் ப்ரெண்ட் இல்லை, கேர்ள் பிரண்ட் இல்லை, ஃபெமினிஸ்ட் இல்லை, டீசன்ட்டான உடை அணிபவர் என்றெல்லாம் போட்டு இதுபோல பொண்ணு வேண்டும் என்று சிலர் கேட்பது போல மீம் ஒன்றை பகிர, அதற்கு கீழே ஒருவர் “சுடுகாட்டில் போயி தோண்டி எடுத்துக்கோங்க” என்று ஒருவர் பதிலளித்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து சிரிப்பது போன்ற எமோஜியுடன் பகிர்ந்து இருக்கிறார். தற்போது அனிதா சம்பத்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சிற்றம்பலம் வெளியான போது ஷோபனா மாதிரி பொண்ணு வேணும் என்று நெட்டிசன்கள் கேட்க தொடங்கிய நிலையில் தற்போது குட்நைட் படத்தை பார்த்து விட்டு அனு மாதிரி பொண்ணு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு அனிதா சம்பத் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்