Categories: சினிமா

விஜய்க்கு போட்டியாக தனது போட்டோவை பதிவிட்ட லெஜெண்ட் அண்ணாச்சி..!

வெளியிட்டது

இளைய தளபதி விஜய் போலவே லெஜன்ட் சரவணா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் சமீபத்தில் தி லெஜன்ட் என்கிற படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்த அவர் பின்னாளில் படத்தில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே தனது கடை விளம்பரங்களை இயக்கி வந்த இரு இயக்குனர்களை வைத்து தி லெஜெண்ட் என்கிற படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, மறைந்த காமெடி நடிகர் விவேக், பிரபு, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் போட்டிக்கு எந்த படமும் இல்லாததால் படம் வசூலையும் குவித்திருந்தது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், பின்னர் குடும்பம் குடும்பமாக சரவணன் படத்தை ரசித்து பார்த்தனர்.

விஜய்க்கு போட்டியாக தனது போட்டோவை பதிவிட்ட லெஜெண்ட் அண்ணாச்சி..! 1

இதனால் ஏகத்துக்கும் குஷியில் இருந்தார் அருள் சரவணன். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக கதைகளை கேட்டு வருகிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இளைய தளபதி விஜய் போன்றே ஹேர் ஸ்டைல் வைத்து ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ட்விட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கிய அவர், ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது ஏதாவது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். அவர்களுடன் சேர்ந்து பிரபு, குஷ்பூ, சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அவ்வபோது படத்தில் இருந்து சில காட்சிகளை மொபைல் போனில் எடுத்து லீக் செய்து வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால் இயக்குனர் வம்சி சூட்டிங் நடக்கும் இடத்திற்கு யாரும் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்று கடுமையான உத்தரவை போட்டிருந்தார். அதையும் மீறி பல சீன்கள் லீக் ஆகி வருவது வழக்கமாக இருந்தது. வாரிசு படத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் நேற்று ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் விஜயுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் லெஜன்ட் சரவணனும் விஜயை போலவே ஹேர் ஸ்டைல் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் விஜயை காப்பியடித்து அண்ணாச்சி இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்