நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் பெண் இயக்குனர்கள் மிக குறைவு அப்படி இருப்பினும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் பிரபலமாக அறியப்பட்டது என்னமோ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாகத்தான். இந்த நிகழ்ச்சியை சிலர் விமர்சித்து இருந்தாலும் பலராலும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியாக இது இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை அழைத்து பேசி தவறு யார் மீது இருந்தாலும் லெஃப்ட் ரைட் வாங்கி விடுவதில் வல்லவராக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீதிமன்றங்கள் இருக்கும்பொழுது நீங்கள் எதற்கு என்று சொல்லி நீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை தடை செய்தது. அதன் பின்னர் படங்களை இயக்குவதை மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார் .கடைசியாக தமிழில் ‘இந்த நிலை மாறும்’ என்கிற படத்தில் நடித்த அவர், தற்போது ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கிற நிகழ்ச்சியை இயக்கியிருக்கிறார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சந்தித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி இருப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, நடிகை அபிராமி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Lakshmy Ramakrishnan