தமிழ் திரையிலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தனது தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி 2003ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.தமிழில் ‘ஐயா’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து 75 படங்களில் நயன்தாரா நடித்து முடித்திருக்கிறார். தற்போது அவர் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் என்கிற படத்திலும், தனது 75 வது படத்திலும், டெஸ்ட் என்கிற மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே தமிழ் திரைலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் நடித்து புகழ்பெற்ற இவர், கடந்த ஆண்டு தனது காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

தொடர்ந்து கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கும் அவர், லிப் பாம் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் சரும பொருட்களை விற்பனை செய்வதற்காக ‘9ஸ்கின்’ என்கிற புது நிறுவனத்தையும் அவர் தொடங்க இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் instagram கணக்கை தொடங்கிய அவர் தற்போது தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தற்போது புதிய புகைப்படங்கள் ஒன்றை பகிர்ந்திருக்கும் அவர், தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதில் ஓமனக்குரியன் அம்மாவிற்கு வாழ்த்துக்கள், நீங்கள்தான் எங்களுடைய பலம், நீங்கள் நன்றாக இருக்க நான் எப்பொழுதும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன், நீண்ட நாள் வாழ பிராத்திக்கிறேன், அன்புடன் விக்கி, நயன், உயிர் மற்றும் உலக் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் நயன்தாராவின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.