நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படங்களில் நடித்த தொடங்கிய சிம்பு தற்போது தமிழில் முன்னணி நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு மிகப்பெரிய ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார் சிம்பு. அந்த வகையில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த படம் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு. அந்த படத்திற்குப் பின்னர் சிம்பு மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பி இருக்கிறார். அந்த படத்திற்காக சுமார் 20 கிலோ வரை எடையை குறைத்து பழைய சிம்புவாக காணப்பட்டார். இந்த படத்திற்குப் பின்னர் சிம்புவிற்கு தற்போது மீண்டும் வெற்றிப் பாதை கிடைத்துள்ளது. அவர் கடைசியாக நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தொடர்ந்து அவர் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ஜில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்த ஒபேலி என் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் .இதில் சிம்புவுடன் சேர்ந்து கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார். கன்னடத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் படமான மஃப்ட்டி என்கிற படத்தின் ரீமேக்காக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் கலையரசன், அனுசித்தாரா, டிஜே போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று நேற்று வெளியாகியிருந்தது.

ஸ்டுடியோ க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அதன்படி இன்று மாலை ஐந்து மணிக்கு பத்து தல படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருந்தது. அதன்படி தற்போது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடல் நம்ம சத்தம் வருகிற பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கிறார்கள்.
It's Time for the Musical Blast 💥💥
First Single of #NammaSatham From #PathuThala will be out on FEB 3 💥
Crooned & Composed by @arrahman 🎙️🎵
✍️ @Lyricist_Vivek
🕺 @iamSandy_Off
🎬 @nameis_krishnaStarring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar pic.twitter.com/DZ7R8XUHGH
— Studio Green (@StudioGreen2) January 31, 2023