Categories: சினிமா

அருண் விஜய் எமி ஜாக்சன் நடிப்பில் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீஸர் வெளியானது

வெளியிட்டது

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் நடிகர் அருண் விஜய். இவர் 1995ம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. கங்கா கௌரி, இயற்கை போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் பாண்டவர் பூமி படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனக்கூறலாம். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அருண் விஜய். 2015ம் ஆண்டில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுத்து இருந்தார் அருண் விஜய். இதில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து இருப்பார். அதைத் தொடர்ந்து தடம், செக்கச் சிவந்த வானம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் எமி ஜாக்சன் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீஸர் வெளியானது 1

தற்போது அருண் விஜய், இயக்குனர் ஏ.எல் விஜய் உடன் இணைந்து “அச்சம் என்பது இல்லையே” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். லண்டனில் இந்த படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான யானை மற்றும் சினம் படங்கள் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் அறிமுக டீசர் தற்போது இணையதளத்தில் வழியாக இருக்கிறது. நீங்களும் அந்த டீசரை காண.. Watch the Below Video..

Youtube Video Code Embed Credits: CM26 Cinemas

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்