தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு அர்னவ், தற்போது கைவிட்டு விட்டு வேறு பெண்ணுடன் சென்று விட்டதாக செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை அளித்திருக்கிறார். மேலும் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் டிவியின் செவ்வந்தி என்றும் சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா கர்நாடகாவை சேர்ந்தவர். இவருக்கும் விஜய் டிவியில் செல்லம்மா என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் அர்னவுக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா அறிவித்திருந்தார். மேலும் நடிகர் அர்னவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தாங்கள் பெற்றோராக அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது நைனா முகமது என்கிற அர்னவ் சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சன் டிவியில் கேளடி கண்மணி என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது, அதில் நடித்துக் கொண்டிருந்த திவ்யா ஸ்ரீதர் என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் இந்து முறைப்படி கோவிலிலும், இஸ்லாமிய முறைப்படியிலும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பின்னர் திவ்யாவை முஸ்லிமாக மதம் மாறச்சொல்லி அர்னவ் கட்டாயப்படுத்தி இருக்கிறார். அப்போதுதான் தன் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் திவ்யாவும் முஸ்லிமாக மதம் மாறி இருக்கிறார்.

திருமணம் ஆகி ஒரே மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார் திவ்யா. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அர்னவ் திவ்யாவை கைவிட்டு விட்டு மற்றொரு சின்னத்திரை நடிகையான ஹன்சிகா என்பவருடன் சென்று விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். ஹன்சிகா முஸ்லிம் என்பதால் திவ்யாவை கைவிட்டுவிட்டு ஹன்சிகாவுடன் அர்னவ் சென்று விட்டதாக திவ்யா கூறியிருக்கிறார். தற்போது திடீர் உடல்நல குறைவால் கவனிக்க ஆளின்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திவ்யா. வயிற்றில் உள்ள சிசுவுடன் கண்ணீர் தவிக்கும் திவ்யா தனக்கென்று நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான தன்னை நைனா முகமது என்கின்ற அர்னவ் உருக உருக காதலித்து மயக்கி திட்டமிட்டு மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியானதும் தன்னை தவிக்க விட்டு அவரது மதத்தைச் சேர்ந்த ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்று விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், தனது உயிருக்கும் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு முழு பொறுப்பு அர்னவ் தான் என்பதை அவரது வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே திவ்யாவுக்கு கரு கலைப்பு செய்ய மருத்துவர்கள் முயன்றதாக கூறி அவரது வழக்கறிஞர் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் ஆணையரிடம் முறையிட உள்ளதாக திவ்யாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த முழு செய்தியை நீங்களும் காண..
Watch the below video..
Youtube Video Code Embed Credits: Polimer News