நடிகர் அருண் விஜய் நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது “சினம்” திரைப்படம். இந்த திரைப்படத்தை அருண் விஜயின் தந்தை விஜயகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கி இருக்கிறார். இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க தொடங்கினர். ஆனால் கொரோனா காலம் என்பதால் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் அருண் விஜய். கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எப்பொழுதும் அருண் விஜயை தாழ்த்திக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஒரு நாள் அருண் விஜயின் மனைவி அம்மா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக கொலை செய்யப்படுகிறார். அவரின் சடலத்துக்கு அருகே மற்றொரு ஆண் சடலமும் இருக்கிறது. இதனால் அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கை கள்ளக்காதல் என்று தவறாக சித்தரித்து வழக்கு பதிவு செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் அருண் விஜய் அந்த இன்ஸ்பெக்டரின் கைகளை உடைத்து விடுகிறார். உயர் அதிகாரியை தாக்கிய வழக்கில் அருண் விஜயை வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறார்கள்.
பின்னர் உண்மையை உணர்ந்து மீண்டும் அருண் விஜயை வேலைக்கு சேர்த்து கொண்டு, அவரின் மனைவியின் வழக்கை விசாரிக்க சொல்கிறார்கள். தனது மனைவியின் கொலைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதே சமயம் தன் மனைவியின் மீதான களங்கத்தை துடைக்க வேண்டும் என்று படாத பாடு படுகிறார் அருண் விஜய். அந்தக் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? கொலைக்கான காரணம் என்ன? அவர் வழக்கிற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதுதான் படத்தின் மீதி கதை. நேர்மையான அதிகாரியாக இருக்கும் ஒருவரின் மனைவி கொல்லப்படும்போது கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க அவர் படும் இன்னல்களையும், தன்னுடைய குழந்த குழந்தை மீது அவர் காட்டும் அன்பு என, போலீஸ் ஆகவும், குழந்தைக்கு தந்தையாகவும் மிக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய்.
படத்தின் முதல் பாதி முழுவதிலும் அருண் விஜய் மற்றும் ஹீரோயின் பாலக் லால்வாணி ஆகியோரின் காதல் மற்றும் குழந்தைகள் மீதான அன்பு ஆகியவை பற்றிய படம் நகர்கிறது. இடைவேளைக்கு முன்பு படத்திற்கான விறுவிறுப்பு கூடுகிறது. கிளைமாக்ஸ் இல் அருண் விஜய் எடுக்கும் முடிவு சரியா தவறா என்பதை நாமும் சற்று யோசிக்க வைத்துள்ளது கிளைமாக்ஸ் காட்சிகள். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருந்தது ஆகவே கருத்து தெரிவித்தனர்.
படத்தின் பாசிடிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது,
படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது.
சமூகத்தில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து மக்கள் ஒவ்வொருவரும் உண்மையான சினம் கொள்ள வேண்டும். அது அரசும் காவல்துறையும் மட்டும் நினைத்தால் முடியாது. மக்களும் அதற்காக கோபப்பட வேண்டும். கேள்வி கேட்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது இந்த படம். சினம் உண்மையான அறச்சீற்றம்..! TamilGlitz Rating 3.75/5